Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11:27 AM Jan 21, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, மனுதாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

அந்த மனுவில், வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து, 70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு மூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்ததாகவும், அந்த வழக்கின் மீது விசாரணை நடத்த கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் மாவட்ட குற்றப்பிரிவிடம் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அதனை பரிசீலித்து மேல் விசாரணை நடத்தி, விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags :
former MinisterHigh courtK.D. Rajendra BalajiPetition
Advertisement
Next Article