Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சொர்க்கவாசல் படத்தை தடை செய்யக்கோரி மனு - பரிசீலினை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு !

04:27 PM Jan 06, 2025 IST | Web Editor
Advertisement

சொர்க்கவாசல் திரைப்படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜிக்கு எதிரான மனு மீது பரிசீலினை செய்ய கோரி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் திரைப்படம் டிச.27 ம் தேதி நாடு முழுவதும் ஓடிடியில் (OTT) வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வீரபாண்டி கட்டபொம்மனை பின்பற்றக்கூடியவர்கள் அவமதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் சொர்க்கவாசல் திரைப்படத்தை OTTயில் தடை செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு முழுவதும் வெளியாகும் திரைப்படத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை எவ்வாறு தடை விதிக்க முடியும். இது மட்டுமல்லாமல் இப்பொழுது இது ஒரு பேஷனாக உள்ளது. ஒரு படத்தை எடுப்பது அதை தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்து படத்தை பிரபலமாக்குவது என இதுபோன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு திரைப்படத்தில் சில கருத்துக்கள் வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானவர் அதை பார்க்கக் கூடிய சூழலும் ஏற்படுகிறது. திரைப்படத்தை பொழுதுபோக்காக விட்டு விட்டால் அது யாருக்கும் தெரியாமலே போய்விடும். இதுமட்டுமல்லாமல், இந்த நீதிமன்றத்திற்கு நாடு முழுவதும் தடை விதிப்பதற்கு எப்படி அதிகாரம் உள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தை அல்லது உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருமங்கலம் பகுதியை சேர்ந்த நாயக்கர் இளைஞர் பேரவையின் மாநில தலைவர் சொர்க்கவாசல் திரைப்படத்தை தடை செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது மனு குறித்து பரிசீலினை செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :
againstconsiderHigh courtmovieottPetitionPoliceRJ BalajiSORKAVASAL
Advertisement
Next Article