For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஹேய் சூப்பர் ஸ்டாருடா… ஹண்டர் வன்ட்டார் பாருடா…” - #Vettaiyan படத்தின் Prevue வெளியானது!

08:30 PM Sep 20, 2024 IST | Web Editor
“ஹேய் சூப்பர் ஸ்டாருடா… ஹண்டர் வன்ட்டார் பாருடா…”    vettaiyan படத்தின் prevue வெளியானது
Advertisement

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை கடந்த 16ம் தேதி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் ஆகியோரில் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இப்படத்தின் மனசிலாயோ பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த சூழலில், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹண்டர் வன்ட்டார்’ என்ற பாடல் இன்று காலை வெளியானது. இந்த நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியானது.

Tags :
Advertisement