For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'ஹே மின்னலே... ஹே மின்னலே' - வெளியானது #Amaran திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

09:29 PM Oct 04, 2024 IST | Web Editor
 ஹே மின்னலே    ஹே மின்னலே    வெளியானது  amaran திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாயுள்ள அமரன் திரைப்படத்தின் 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21-ஆவது திரைப்படம் ‘அமரன்’. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.இத்திரைப்படம் அக்டோபர் 31 ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் ‘அமரன்’ படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், ‘அமரன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹே மின்னலே' பாடல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement