For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"He's the GOAT" - வெற்றிக்கு பின் மைக் டைசனை புகழ்ந்த ஜேக் பால் - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

07:23 PM Nov 16, 2024 IST | Web Editor
 he s the goat    வெற்றிக்கு பின் மைக் டைசனை புகழ்ந்த ஜேக் பால்   நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
Advertisement

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால். இதில் நடுவர்கள் தங்கள் முடிவுகளில் மாறுபட்டனர். நடுவர்களில் ஒருவர் ஜேக் பாலுக்கு 80-72 என்றும், மற்ற இருவர் 79-73 என்றும் எட்ஜ் கொடுத்தனர்.

Advertisement

அமெரிக்கத் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்(58) தனது வாழ்நாளில் 59 குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று 50 போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறார். போட்டியின் போது இவரின் பாய்ச்சலான குத்துகளால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் ஏராளம். இவர் கடைசியாக கெவின் மைக்ப்ரைட் என்பவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்திக்கொண்டார். இதனிடையே பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்த டைசன் தெலுங்கில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

27 வயதான சமூக வலைதள பிரபலமாக இருந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் டைசனுக்கு போட்டியாக களமிறங்கினார். ஜேக் பால் தனது தொழில்முறை குத்துச்சண்டையை 2018ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்று 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். இந்தப் போட்டி தலைமுறைகள் கடந்த இரண்டு வீரர்களுக்கு இடையிலான போட்டியாக பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் மன்னனான மைக் டைசன் பாக்சிங் ரிங்கில் என்ட்ரி கொடுத்தது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் ‘ஏடி அண்ட் டி’ விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று (நவ. 16) நடைபெற்றது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று(16.11.2024) தொடங்கிய போட்டியில் 70 ஆயிரம் ரசிகர்கள் நேரில் பார்வையிட வந்தனர். போட்டி தொடங்கியதும் டைசன் சில பஞ்ச்-களை வேக வேகமாக கொடுத்தார். ஆனால், அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு பால் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார். சில பஞ்ச்கள் மிஸ் ஆகின. கடந்த 2005-க்கு பிறகு டைசன் விளையாடிய போட்டியாக இது பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஜேக் பால் தொழில்முறை குத்துச்சண்டைக்குள் என்ட்ரி கொடுத்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தப் போட்டி கடந்த ஜூலை 20-ம் தேதி நடந்திருக்க வேண்டும். டைசனுக்கு வயிற்று பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிக்கான நடுவர்களில் ஒருவர் ஜேக் பாலுக்கு 80-72 என்றும், மற்ற இருவர் 79-73 என்றும் எட்ஜ் கொடுத்தனர்.

இறுதி பெல் அடித்த போது மரியாதை நிமித்தமாக டைசன் முன்பாக ஜேக் பால் தலை வணங்கினார். நேற்றைய தினம் ஃபேஸ்-ஆஃப்பின் போது பாலை மைக் டைசன் தாக்கி இருந்தார். அதற்கான பதிலை ரிங்கில் கொடுப்பேன் என பால் கூறியிருந்தார். ஆனால் வெற்றிக்குப் பிறகு ஜேக் பால் தான் மைக் டைசனால் இன்ஸ்பையர் ஆனதாகவும் அவர்தான் கோட்(GOAT) என்றும் அவருடன் சண்டையிட்டதில் பெருமையாக இருந்தது என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Tags :
Advertisement