கோடை வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாக்க சில வழிகள்...!
12:28 PM Apr 24, 2024 IST | Web Editor
Advertisement
கோடை வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாக்க சில வழிகளை இங்கு காணலாம்.
Advertisement
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை, நீரிழப்பு, வேர்க்குரு, அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்னை போன்றவை ஏற்படும்.
கோடை காலத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படக்கூடிய வாய்ப்புள்ளது. கோடை வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாக்க சில வழிகளை இங்கு காணலாம்.
- தினமும் காலை, மாலை அல்லது இரவில் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். இதன் மூலம் உடல் சூட்டை குறைக்கலாம்.
- அதிக அளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலு தினமும் குறைந்தது 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடையை அணிய வேண்டும்.
- காலை 11 மணிக்குள்ளும், மாலை 5 மணிக்கு மேலும் வெளியில் செல்லாம்.
- காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.
- மதிய வேளையில் வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், நம் உடல் நேரடியாக வெயில் படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. தலையை மூட துணி அல்லது குடையை பயன்படுத்தலாம்.
- வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் புற ஊதா கதிர்களிலிருந்து சருமம் பாதுகாக்கப்படுவது.
- கோடை வெயில் கண்களை பாதிக்கும் அபாயம் உள்ளதால், சன் கிளாஸ் அணிந்து செல்லலாம்.
- சூடான பானங்கள் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.
- உடலை குளிர்ச்சியாக வைக்கக்கூடிய மோர், இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றைப் பருகலாம்.
- பயணத்தின்போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும்.
- தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
- வீடுகளில் சூரிய ஒளி நேரடியாகப் படும் ஜன்னல், கதவுகள் ஆகியவற்றைத் திரைச்சீலைகளால் மூட வேண்டும்.
- இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொள்ளலாம்.
- கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. இதனால் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
- உணவில் பழங்கள் கீரைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
- வெயிலினால் சருமத்தில் ஏற்பட்ட கருமையை போக்க இயற்கையான கற்றாலை ஜெல்லை பயன்படுத்தலாம். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என கூறுவர்.