Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலையை கடந்து சென்ற யானை கூட்டம்... வழி விட்டு காத்திருந்த பொதுமக்கள் - காட்சிகள் #Viral!

08:35 AM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

கோவையில் சாலையை கடந்து செல்லும் யானைக்கூட்டத்திற்கு பொதுமக்கள் வழிவிட்டு நிற்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும் வறட்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி மலையை ஒட்டியுள்ள அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் படையெடுக்க தொடங்கின. பின்னர் பருவமழையால் வறட்சி நிலை மாறியது. இருப்பினும் வீடுகளில் உள்ள உணவுகள், விவசாய பயிர்களை ருசிக்க யானைகள் அவ்வப்போது கிராம பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.

வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து யானைகள் ஊர் மற்றும் விவசாய நிலத்திற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் தடுத்து வருகின்றனர். ஆனால், இவ்வாறு விரட்டப்படும் யானைகள் வனப்பகுதிகளுக்குள் செல்லாமல், அடுத்தடுத்த கிராமப் பகுதிகளுக்குள் செல்கிறது.

இந்நிலையில் கோவை துடியலூர் அடுத்த வடவள்ளி - பன்னிமடை சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அதற்கு வழிவிட்டு நின்று, யானைகள் செல்லும் காட்சியை அச்சத்துடன் பார்த்து கடந்து சென்றனர். அதில் ஒருவர் செல்போனில் பதிவு செய்த வீடியோ, தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Tags :
covaiElephantViral
Advertisement
Next Article