Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜார்க்கண்ட் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

05:27 PM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

ஜாா்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். 

Advertisement

நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜன.31ம் தேதி கைது செய்தது. அதற்கு முன்பு அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடா்ந்து, ஜேஎம்எம் கட்சியைச் சோ்ந்த சம்பாய் சோரன் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றாா்.

பின்னர் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி மாநிலத் தலைநகா் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, ராஞ்சியில் உள்ள சம்பாய் சோரன் இல்லத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவா்கள் கூட்டம் நேற்று (03.07.2024) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜேஎம்எம் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரனை தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.  ஜாா்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரனே மீண்டும் பதவியேற்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜாா்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் நேற்று (03.07.2024) ராஜிநாமா செய்தார். இதனை அடுத்து ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் இன்று மீண்டும் ஜாா்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்ககண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.

Tags :
cp radhakrishnanHemant SorenJharkhandJharkhand CM
Advertisement
Next Article