#HemaCommitteeReport | வயதான நடிகைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை -நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனை!
மலையாளத் திரைப்படங்களில் வயதான நடிகைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் மோகன்லால் உள்பட அனைவரும் ராஜினாமா செய்த நிலையில் மோகன்லால் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், “மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் வயதான பெண்களுக்குக் கூட
பாதுகாப்பு இல்லை .என்பதை தன் சொந்த அனுபவங்களில் உணர்ந்து உள்ளேன்.
குடும்பப் படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநர் ஒருவர் தன்னை கொச்சியில் உள்ள ஹோட்டல் அறைக்கு வரவழைத்துக் கடுப்பான பதில் அளித்ததால் தான் படத்திலிருந்து வெளியேறினேன்.இயக்குநரின் ஆர்வத்திற்கு அடிபணியாததால் 19 ரீடேக்குகள் இருந்தன.மலையாள இயக்குநரின் தமிழ்ப் படத்தின் லொகேஷனிலும் அசம்பாவிதம் நடந்தது.
அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகைகளுக்குத் தமிழ் செட்களில் மரியாதை கிடைக்கும்.ஆனால் ஹேமா கமிட்டி மாதிரி மலையாளத்தில் மட்டும்தான் சாத்தியம்.படப்பிடிப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் தொழிலாளர் சுரண்டல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.