For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள் - உணவு, குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை!

10:54 AM Dec 19, 2023 IST | Web Editor
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் மக்கள்   உணவு  குடிநீர் கிடைக்கவில்லை என வேதனை
Advertisement

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியிருக்கும் தங்களுக்கு இதுவரை உணவு உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்கும் பணிகள் தொடக்கம்!

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது.  இதனால்,  டிசம்பர் 17- ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அதில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 500 பயணிகள் மூன்றாவது நாளாக சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில்,  ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்தது. 

 ஆனால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உள்ள தங்களை மீட்க இதுவரை யாரும் வரவில்லை. பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தண்ணீர் என எந்தவித பொருட்களும் வழங்கவில்லை என ரயில் நிலையத்தில் சிக்கியிருந்த பயணிகளில் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில், ரயில் நிலையத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி விரைவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement