For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேற்று போல் மழை பெய்யாது... ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

11:43 AM Dec 18, 2023 IST | Web Editor
நேற்று போல் மழை பெய்யாது    ஆனால்    தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று போல் மழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இது குறித்து  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

"தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். மற்ற அருகிலுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். 

நேற்று போல் மழை பெய்யாது, ஆனால் இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று போல் மழை பெய்யாது என்று கூறி அச்சத்தைப் போக்கி, இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது" என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இது குறித்து வானிலை மையம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "குமரிக் கடல், அதையொட்டிய பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழ்நாட்டின் பல இடங்களிலும், வட தமிழ்நாட்டிலும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டில்,செவ்வாய் முதல் சனி (டிச.19-23) வரை ஒரு சில இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement