For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#HeavyRain | கோவையில் கொட்டித்தீர்க்கும் கனமழை - மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் வெளியீடு!

07:00 PM Oct 14, 2024 IST | Web Editor
 heavyrain   கோவையில் கொட்டித்தீர்க்கும் கனமழை   மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் வெளியீடு
Advertisement

கோவை மாநகராட்சி சார்பில் அவசர கால உதவி எண் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. அதற்கு மேல் மதியத்தில் இருந்து கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம் ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சாய்பாபா காலனி, சிவானந்த காலனி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் குழந்தைகள் உள்பட 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் முதலில் பேருந்துக்குள் சிக்கி இருந்த பயணிகளை வெளியேற்றினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்து வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் அவசர கால உதவி எண் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. மழை, புயல், வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அனைத்து புகார்களையும்

அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422 2302323

வாட்ஸ் அப் எண் 81900 00200 ஆகிய எண்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மண்டல வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள்

வடக்கு மண்டலம் 89259 75980

மேற்கு மண்டலம் 89259 75981

மத்திய மண்டலம் 89259 75982

தெற்கு மண்டலம் 90430 66114

கிழக்கு மண்டலம் 89258 40945

Tags :
Advertisement