Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனமழை பாதிப்பு - தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

12:14 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி உள்ளனர்.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின.

இதையும் படியுங்கள் : 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் – தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா

இந்நிலையில் அதிகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பொதுமக்கள்  வெள்ள நீரில் சிக்கி உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணத்தால் அரசு நர்சிங் கல்லூரியில் வெள்ளநீர் முற்றிலும் சூழ்ந்துள்ளது. இதனால், அந்த கல்லூரியில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.

Tags :
government nursing collegeHeavyRainfallheavyrainsKanyakumariRainsSouthTNRainsstudentsTenkasiRainsThoothukudiTirunelveliRainstrapped
Advertisement
Next Article