கனமழை எதிரொலி - திருப்பத்தூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:55 AM Nov 06, 2025 IST
|
Web Editor
Advertisement
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
காலை முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அறிவித்துள்ளார். இதனிடையே தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article