தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை: வானிலை ஆய்வு மைய தலைவர்!
தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை என வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழைக்கு மேக வெடிப்பு காரணமில்லை என வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மழை நிலவரம் குறித்து மேலும் அவர் கூறுகையில், தென்காசியில் 60%, துத்துக்குடியில் 80% மழை பெய்துள்ளது. இது இயல்பை விட கூடுதலாக பதிவாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழைக்கு காரணம் மேக வெப்பு அல்ல அதிக கனமழை தான் பெய்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (டிச.18) தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படியுங்கள்: நெல்லை பொட்டல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரம்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யும். மேலும், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளிலும் திண்டுக்கல், நீலகிரி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(டிச.19) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகிளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் டிச. 18, 19 ஆகிய தேதிகளில் தென் மாவட்ட கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள் என தென்மண்டல ஆய்வு மையத் துணைத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.