For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை | நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் | களத்தில் நியூஸ் 7 தமிழ்!

04:50 PM Dec 22, 2023 IST | Web Editor
தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை   நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம்   களத்தில் நியூஸ் 7 தமிழ்
Advertisement

தென் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த போதிலும், நெல்லை மாவட்டம் திசையன்விளை,  ராதாபுரம்,  சாத்தான்குளம் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.  இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் அப்பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் அளித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

Advertisement

மணிமுத்தாறு,  பாபநாசம் அணைகளின் உபரிநீரானது முறையான வாய்க்கால்களில் திறக்காமல் ஆற்றில் கலந்துள்ளது.  நம்பியாறு - கருமேனியாறு - தாமிரபரணி கால்வாய் திட்டத்தின் வழியாக வெள்ள நீர் முறையாக திறக்கப்படாததாலும்,  வெள்ள நீருக்கென உருவாக்கப்பட்ட வடிகாலில் மழைநீர் மட்டுமே வருவதாலும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மணிமுத்தாறு அணையில் 80 அடி முதல் 100 அடி வரை நீர் இருந்த போதே,  80 அடி அல்லது 100 அடி கால்வாய்களில் நீர் முறையாக வெளியேற்றப்பட்டிருந்தால்,  தற்போது திசையன்விளை,  ராதாபுரம் பகுதிகளுக்கு நீர் இருந்திருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் மணிமுத்தாறு அணையில் நீரின் அளவு 100 அடியை தாண்டிய பிறகே,  வெள்ள அபாய எச்சரிக்கையால் அணையின்  நீரானது கால்வாய்களில் திறக்கப்படாமல் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.  இதன் காரணமாகவே அப்பகுதிகளில் தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:

"மணிமுத்தாறு,  பாபநாச அணைகளின் வெள்ள நீரை பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை.  நம்பியாறு-கருமேனியாறு-தாமிரபரணி கால்வாயை முறையாக பயன்படுத்தியிருந்தால் சேதங்களை தவிர்த்திருக்கலாம். குளங்களை முறையாக பலப்படுத்தவில்லை.

பல இடங்களில் குளங்களில் உடைப்பு லட்சக்கணக்கான கனஅடி நீர் வீணாக கடலில் கலந்துள்ளது.  திசையன்விளையின் எம்எல்தேரி பகுதி தற்போதே வறட்சியை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டது.  32 கிராமங்கள்,  177 குளங்கள்,  2,657 கிணறுகள் பாசன வசதி பெறும் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்"

இவ்வாறு விவசாய சங்க நிர்வாகிகள் நியூஸ் 7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த முழு செய்தியை காணெளியாக காண:  

Tags :
Advertisement