Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தானில் கனமழை : உயிரிழப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
08:43 AM Jul 17, 2025 IST | Web Editor
பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Advertisement

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து சேதமான நிலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 116 பேர் உயிரிழந்த நிலையில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கனமழையால் வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags :
FloodingHeavy rainlandslidepakistanPakistanFloodRain
Advertisement
Next Article