Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை!

09:01 AM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.07) பெய்த தொடர் கனமழை பெய்தது. இந்நிலையில், கனமழையால் சம்பா பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கியது.

இதையும் படியுங்கள் : பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்து- 3 அமைச்சர்கள் இடைநீக்கம்...!

அதனைத் தொடர்ந்து, தொடர் மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 25,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மிகவும் அதிர்ச்சி உள்ளனர்.

Tags :
farmersheavy rainsMayiladuthuraiRice cropsTamilNaduworried
Advertisement
Next Article