Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

12:12 PM Nov 07, 2023 IST | Syedibrahim
Advertisement

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Advertisement

தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை,  ராசி மணல், பிலிகுண்டு, மொசல் மடுவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் திடீர் மழை பெய்தது.  இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து விநாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நிலையில்,  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்து தமிழக,  கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சிறிய அருவி,  ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போது வெளியே தெரிந்த பாறை திட்டுக்கள் தற்போது மூழ்கியுள்ளன.

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags :
#Heavyrains | #Kerala | #flood | #dam | #News7Tamil | #News7TamilUpdatesCatchmentCauveryHokanagal
Advertisement
Next Article