For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மும்பையில் தொடரும் கனமழை - வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

07:09 PM Jul 20, 2024 IST | Web Editor
மும்பையில் தொடரும் கனமழை   வீட்டு பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
Advertisement

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மும்பைக்கு இன்று (ஜூலை 20) மஞ்சள் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை 19) மும்பையின் மத்திய பகுதியில் சராசரியாக 78 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு மும்பையில் முறையே 57 மிமீ மற்றும் 67 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால், மும்பையின் பொதுப் போக்குவரத்து சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் புறநகர் ரயில் சேவைகள் தாமதமாக 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

ஹார்பர் லைனில் உள்ள சுனாபட்டியில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் இயக்கம் மந்தமடைந்துள்ளது. ரயில் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மத்திய ரயில்வேயின் பிரதான ரயில் பாதையில் கூடுதல் தாமதம் ஏற்பட்டது. தானே மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தானே வந்தனா பஸ் டிப்போ மற்றும் உள்ளூர் மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதனிடையே, சனிக்கிழமையன்று கிராண்ட் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 70 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tags :
Advertisement