#WeatherUpdate | இரவு 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அதி கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, காரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.