For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை - குருவாயூர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தம்...

11:58 AM Dec 19, 2023 IST | Web Editor
சென்னை   குருவாயூர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தம்
Advertisement

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சென்னை - குருவாயூர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும்,  இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,  சென்னை எழும்பூரிலிருந்து குரூவாயூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.  அதுபோல, குருவாயூரிலிருந்து எழும்பூர் வரை செல்லக் கூடிய விரைவு ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படவிருந்த 24 ரயில்கள் செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை (டிச.19) வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில்கள் (இருமார்க்கத்திலும்), கோவை-நாகர்கோவில் (16322) ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை, நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, செல்லும் அனைத்து முன்பதிவில்லா ரயில்களும், திருச்செந்தூரிலிருந்து வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா ரயிலும் டிச.19-இல் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி திருவனந்தபுரம் (இருமார்க்கம்), பாலக்காடு திருநேல்வேலி (எண். 16792), திருச்செந்தூர் எழும்பூர் (20606) ஆகிய விரைவு ரயில்கள் டிச.19-இல் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement