கனமழை எதிரொலி - 24 ரயில்கள் ரத்து!
இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால், நெல்லை மற்றும் திருநெல்வேலியிலிருந்து இயக்கபடவிருந்த 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படவிருந்த 24 ரயில்கள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை, வாஞ்சி, மணியாச்சி, சென்னை, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் - கோவை, திருச்செந்தூர் - பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் 5 விரைவு ரயில்கள் திண்டுக்கல் வரை இயக்கப்படுகின்றன.