நீடிக்கும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!
தொடர்மழை காரணமாக சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக வட மாவட்டங்கள் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையும் படியுங்கள்:சென்னையில் வழக்கத்தை விட குறைவாக மழைப்பதிவு!
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவுடையது. அதனை தொடர்ந்து, ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியும், இதன் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்பொது நீர் இருப்பு 21.97 அடியாக உள்ளது. மேலும் ஏரிக்கும் வரும் நீரின் அளவு 142 அடியாகவும், வெளியேறும் நீரின் அளவு 160 கன அடியாகவும் உள்ளது.