For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்மாவட்டங்களில் கனமழை: 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

01:23 PM Dec 18, 2023 IST | Jeni
தென்மாவட்டங்களில் கனமழை  4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை
Advertisement

தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில்,  4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற தென் மாவட்டங்களும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : “மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

இந்நிலையில், நெல்லை,  தென்காசி,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர்களுடன்,  தென்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆணையர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலை குறித்தும்,  மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர்கள்,  அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததார்.

Tags :
Advertisement