“கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை” - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள கடற்கரையிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரை வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வயநாட்டில் கனமழை கொட்டியதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.