#worldnews | மத்திய ஐரோப்பாவில் கனமழை | 6 பேர் உயிரிழந்ததாக தகவல்!
புயல் காரணமாக பெய்த மழை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தியது.
கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா முழுவதும் பரவலாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி குறைந்தது 6 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல பகுதிகளில் நதியின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ருமேனியா மற்றும் செக் குடியரசில் இதுவரை பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பதிவான நான்கு இறப்புகளும் கிழக்கு ருமேனியாவின் கலாட்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இங்கு சுமார் 5,000 வீடுகள் சேதமடைந்ததுடன் 25,000 பேர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.
இதனிடையே, மூன்று வயதான பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது. இதனிடையே, போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, தெற்கு ஜேர்மனி மற்றும் அவுஸ்திரியாவின் சில பகுதிகளும் அதிக கனமழையை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
செக் குடியரசின் வடக்கே, மிக மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின. நாட்டின் சில பகுதிகள் ஞாயிற்றுக்கிழமைக்குள் சராசரி ஆண்டு மழையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக எதிர்கொள்ளக் கூடும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்.