For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

4 மாவட்டங்களில் கடும் மழை | வானிலை ஆய்வு எச்சரிக்கை...!

06:51 AM Jan 08, 2024 IST | Web Editor
4 மாவட்டங்களில் கடும் மழை   வானிலை ஆய்வு எச்சரிக்கை
Advertisement

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Advertisement

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால், வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வரும், 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement