கனமழை எதிரொலி | பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...
தொடர் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது.நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்குள் சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை , காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.