கனமழை எதிரொலி; மழைநீர் தேங்கிய பகுதிகளில் சென்னை மேயர் பிரியா ஆய்வு!
தியாகராய நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை சென்னை மேயர் பிரியா, மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் நேற்று (நவ.29) இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக தியாகராய நகரில் தேங்கிய மழை நீரால் பொது மக்கள் அவதிக்குள்ளானர். அதனை தொடர்ந்து, சென்னை மேயர் பிரியா, மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரடியாக களத்தில் இறங்கி, வடிகால் பணிகளை ஆய்வு செய்துள்ளார். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த பின் சென்னை மேயர் பிரியா பேட்டி அளித்தார்.
மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
சென்னை மாநகராட்சியில் 20 செண்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதனை தொடர்ந்து, காலை 6 மணிக்குள் சரி செய்வதற்கான வேலைகள் அதிகாரிகள் மூலம் முடிக்கிவிடப்பட்டிருக்கிறது.
மேலும், களத்தில் இரவு முழுவதும் அதிகாரிகளோடு மாமன்ற உறுப்பினர்களும் பங்கு பெற இருக்கிறார்கள்.சில பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதுவும் வெளியேற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம்.
கனமழை காரணமாக, மாம்பலம் கேனல் முழுவதும் நிறைந்திருந்தது. அதனால் வெளியேறுவதற்கு கொஞ்சம் தாமதமானது. இப்போது அங்கும் வடிய தொடங்கி இருக்கிறது. 16 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சில பள்ளமான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அங்கேயும் மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். மிகவும் பாதிப்படைந்த பகுதியாக இருந்தால் அருகில் உள்ள சமூதாய கூடங்களில் தங்க வைக்க ஏற்படுகளும் செய்யப்பட்டு வருகிகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் உணவு வழங்கவும் முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்பெல்லாம் ஐந்தாறு செண்டி மீட்டர் மழை பெய்தாலே மாநகரம் முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலை இருந்தது. ஆனால், இன்று 20 செ.மீ மழை பெய்த போதிலும் இரண்டு மூன்று மணி நேரத்தில் தண்ணீர் வடிந்திருக்கிறது.
அதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதவது,
பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. நமக்கு சவாலாக இருக்கிறது, தியாகராய நகர் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதை பார்க்க முடிகிறது, அங்கு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
மேலும், ஒரு சில சுரங்கப்பாதைகளும் தண்ணீர் தேங்கி இருந்தது தற்போது அதனையும் வெளியேற்றி வருகிறோம். இரவு முழுதும் நமது பணியாளர்கள் பணியில் இருக்கிறார்கள், 16,000 நபர்களும் பல்வேறு இடங்களில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
மாநகராட்சி அதிகாரிகள் இரவு பணியில் இருக்கிறார்கள், மழை பெய்து இடங்களை ஆய்வு செய்தபின் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.