Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் கனமழை! 2-வது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

10:14 AM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், மீண்டும் கனமழை பெய்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.  இதனால், அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதையும் படியுங்கள்:தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேலும்,  பேச்சிப்பாறை அணையில் இருந்து வினடிக்கு 100 கன அடி உபரி நீரும், சிற்றார்
அணையில் இருந்து வினாடிக்கு 129 கன அடி உபரி நீரும் இரண்டாவது நாளாக
வெளியேறப்படுவதால் கோதையாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது  நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த மாதத்தில் மட்டும் இது மூன்றாவது முறையாக தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
2nd daybannedHeavy rainKANNIYAKUMARItamil naduTHIRPARAPPUTouristsWaterfalls
Advertisement
Next Article