மே.வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பலத்த சூறாவளி - 5பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் திடீர் சூறாவளி தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளியில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராஜார்ஹாட், பர்னீஷ், பகாலி, ஜோர்பக்டி, மாதப்டாங்கா, சப்திபாரி ஆகிய பகுதிகளில் சூறாவளியால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் ஜல்பைகுரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்று சூறாவளியால் பாதித்த மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.