Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

02:18 PM Apr 17, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Advertisement

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில்.  தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது.  இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பல மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

"ஒடிசா, மேற்கு வங்காளம்,  ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும்.  பொதுமக்கள் லேசான, வெளிர் நிற, பருத்தி ஆடைகளை அணியவும்.  தலையை மறைக்க துணி, தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தவும். சமவெளி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாகவும், மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாகவும் இருக்கும்.

பஞ்சாப்,  ஹரியானா,  சண்டிகர்,  டெல்லி,  உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 18-20 வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்.  பலத்த காற்று வீசும்.  டெல்லியில் ஏப்ரல் 17 ஆம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசும்.  ஏப்.18 இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஏப்ரல் 19 அன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.  பலத்த காற்று வீசும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.

Tags :
heat waveIMDIndian Meteorological DepartmentTemperatureWeatherWeather Update
Advertisement
Next Article