For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்ப அலை: தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் அலர்ட்!

10:23 AM Apr 24, 2024 IST | Web Editor
நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்ப அலை  தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் அலர்ட்
Advertisement

தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது.  பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், பல இடங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : மதுரை சித்திரை திருவிழா -திருமஞ்சனமாகி சேஷ வாகனத்தில் தேனூர் புறப்படும் கள்ளழகர்!

இந்நிலையில்,  தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.  அதேபோல் உள் கர்நாடகா,  தெலங்கானா,  ராயலசீமா, உத்திரப்பிரதேசம்,  கடலோர ஆந்திரா மற்றும் ஏனம்,  மேற்கு வங்கம்,  சிக்கிம்,  ஜார்க்கண்ட்,  பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கடலோர ஒடிசாவின் ஒரு சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்ப அலை வீச கூடும் என்றும் எச்சரித்துள்ளது.  இன்றும் நாளையும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும்,  ஒடிசாவிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement