For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இதய அறுவை சிகிச்சை மருத்துவர் செரியன் மறைவு - பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

07:16 PM Jan 26, 2025 IST | Web Editor
இதய அறுவை சிகிச்சை மருத்துவர் செரியன் மறைவு   பிரதமர் மோடி  முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
Advertisement

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் கே.எம்.செரியன், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவர் குழந்தைகள் இதய அறுவை சிகிச்சையிலும் முன்னோடியாக திகழ்ந்தவர். இவரின் மருத்துவ சேவையை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Advertisement

மேலும் சென்னை பெரம்பூரிலுள்ள ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார்.

இந்நிலையில் இவரின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“நமது நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவால் துயரமடைந்தேன். இதய மருத்துவத்தில் மருத்துவர் கே.எம்.செரியனின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர் செரியனின் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது;

“ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியும், இதய அறுவை சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்றவருமான டாக்டர் கே.எம்.செரியனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதயத் துறையில் இவரது பணி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் மருத்துவத் துறையில் பலருக்கு உத்வேகம் அளித்தது.

அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பங்களிப்புகள் மருத்துவத்தில் சிறந்து விளங்க தொடர்ந்து ஊக்கமளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement