For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை - சண்டிகர் மேயர் திடீர் ராஜிநாமா!

07:12 AM Feb 19, 2024 IST | Web Editor
மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை   சண்டிகர் மேயர் திடீர் ராஜிநாமா
Advertisement

மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ்  திடீர் ராஜிநாமா செய்துள்ளார்.

Advertisement

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இந்த ஆண்டு  மே 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.

ஜன.30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.  35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகரில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

இதையும் படியுங்கள்:  தமிழ்நாடு சட்டப்பேரவை: 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்!

இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கும், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்தது. "சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும்.  ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான்  இதனை பார்க்கிறேன்.  தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நிச்சயமாக அந்த நபர் விசாரிக்கப்பட வேண்டும்.  செல்லாத வாக்குகளாகவே இருந்தாலும் அதில் எந்த ஒரு திருத்தத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரி மேற்கொள்ளக்கூடாது.  ஆனால் இது எல்லாம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியாதா?" என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில்  இன்று (பிப். 19) நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது மேயர் பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார்.

Tags :
Advertisement