For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அமரன் படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணமே இவர்தான்" - எமோஷ்னல் ஆன #Sivakarthikeyan!

10:04 PM Oct 08, 2024 IST | Web Editor
 அமரன் படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணமே இவர்தான்    எமோஷ்னல் ஆன  sivakarthikeyan
Advertisement

அமரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு எனது அப்பாதான் முக்கிய காரணம் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் ‘அமரன்’. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் ‘அமரன்’ படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

"அமரன் படத்தில் நடிப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று எனது அப்பா. சிறிய வயதிலிருந்து காக்கிச் சட்டையைப் பார்த்து வளர்ந்தவன் நான். ராணுவத்தின் சட்டை நிறமும் இதன் நிறமும் வேறாக இருக்கலாம். ஆனால், பொறுப்பு ஒன்றுதான். இந்தப் படத்தின் கதை கேட்கும்போதும் படப்பிடிப்பின்போதும் நான் உணர்ந்துகொண்டது மேஜர் முகுந்தனுக்கும் எனது அப்பாக்கும் நிறைய ஒற்றுமைகளைப் பார்த்தேன்.

படம் வெளியானபிறகு அதைப் பற்றி பேசுகிறேன். நடிகர் கமலஹாசன் இதுவைரை எனது படங்களைப் பார்த்தாரா தெரியவில்லை. இந்தப் படத்தில் பார்த்தாக வேண்டிய கட்டாயம். இந்தப் படத்தின் காட்சிகளை கமலஹாசனும் ராணுவ வீரர்களும் பார்ப்பார்கள் என்பதால் ஒரு பதற்றம் இருந்தது. சரியாக செய்ய வேண்டுமென பொறுப்பும் இருந்தது.ராணுவ வீரராக நடித்த முதல்காட்சியில் எனக்கு ஒரு பெருமிதம் இருந்தது. அமரன் படத்தில்தான் ராணுவ வீரராக நடித்த முதல் காட்சிக்குப் பிறகே எனக்கு நானே ஹீரோ ஆகிவிட்டதுபோல உணர்ந்தேன்."

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

Tags :
Advertisement