Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாடக காதலை எதிர்ப்பதால் சாதி வெறியன் என்று கூறுகின்றனர்" - ரஞ்சித் பேட்டி!

11:40 AM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

நாடகக் காதல் என்று சொல்லும் பொழுது என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள் எனவும், என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்களும் நாடகக் காதலை ஆதரிப்பவர்கள் எனவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை பெரியகடைவீதியில் உள்ள கோனியம்மன் கோயிலில், ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித்,

“கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5-ம் தேதி வெளியாகிறது. நாடகக் காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் நடிக்கும் இந்தப் படத்தை நானே இயக்கி இருக்கிறேன். கோவையை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது.

பணக்கார பிள்ளைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் நாடகக் காதல் தான் படத்தின் கரு. இன்றைய காலத்தில் வரதட்சிணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. சுயமரியாதை திருமணம் என்று கூறி எவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களது குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு பண்ணச் சொன்னால், பண்ண மாட்டார்கள்.

பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது. அப்படிச் சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து திருமணம் நடத்தி வைப்பதற்கு பதில், அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே. நான் நாடகக் காதல் என்று சொல்லும் பொழுது என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். மாடுகள் தெய்வமாக, விவசாயத் தொழிலுக்கு காலம் காலமாக பக்க பலமாக உள்ளது. என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்களும் நாடகக் காதலை ஆதரிப்பவர்கள் தான்.

அரசியல் கட்சி தொடங்கவும், சேரவும் எனக்கு திட்டமில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் சட்டப்பேரவையில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? நாளைய தலைமுறையை காப்பாற்ற, அரசியல் மாற்றம் வர வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேர்தல் வந்த காரணத்தினால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு நிதி அளிக்கின்றனர். சாலைகளில் திரும்பும் இடமெல்லாம் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்லோ பாய்சன். இதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.

கள்ளச் சாராயத்தை இவர்களால் ஒழிக்க முடியாது. கவுண்டம்பாளையம் படத்துக்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. அரசியல் மிகப்பெரிய வியாபாரம். எனவே, நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் என ஆசை எனக்கும் உள்ளது. விவசாயிகள் தற்கொலைக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை. கள்ளுக்கடையை திறக்க வேண்டும். அதில் வருமானம் இல்லாததால் இவர்கள் விரும்புவதில்லை. மதுவை வைத்துத் தான் வளர்ச்சி. தமிழ்நாடு, மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சியடைந்து வருகிறது” என தெரிவித்தார்.

Tags :
#ranjithActor Ranjith SpeechCinema updateskavundampalayamkovaiNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article