For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நாடக காதலை எதிர்ப்பதால் சாதி வெறியன் என்று கூறுகின்றனர்" - ரஞ்சித் பேட்டி!

11:40 AM Jun 23, 2024 IST | Web Editor
 நாடக காதலை எதிர்ப்பதால் சாதி வெறியன் என்று கூறுகின்றனர்    ரஞ்சித் பேட்டி
Advertisement

நாடகக் காதல் என்று சொல்லும் பொழுது என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள் எனவும், என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்களும் நாடகக் காதலை ஆதரிப்பவர்கள் எனவும் நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை பெரியகடைவீதியில் உள்ள கோனியம்மன் கோயிலில், ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித்,

“கவுண்டம்பாளையம் திரைப்படம் ஜூலை 5-ம் தேதி வெளியாகிறது. நாடகக் காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக நான் நடிக்கும் இந்தப் படத்தை நானே இயக்கி இருக்கிறேன். கோவையை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது.

பணக்கார பிள்ளைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் நாடகக் காதல் தான் படத்தின் கரு. இன்றைய காலத்தில் வரதட்சிணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. சுயமரியாதை திருமணம் என்று கூறி எவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களது குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு பண்ணச் சொன்னால், பண்ண மாட்டார்கள்.

பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது. அப்படிச் சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து திருமணம் நடத்தி வைப்பதற்கு பதில், அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே. நான் நாடகக் காதல் என்று சொல்லும் பொழுது என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். மாடுகள் தெய்வமாக, விவசாயத் தொழிலுக்கு காலம் காலமாக பக்க பலமாக உள்ளது. என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்களும் நாடகக் காதலை ஆதரிப்பவர்கள் தான்.