Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என கூறிவிட்டு இப்படி BLACKMAIL செய்கிறார்" - அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள் 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன் என்று கூறுவதை BLACK MAIL செய்வது போலத்தான் பார்க்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
09:31 PM Feb 16, 2025 IST | Web Editor
PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள் 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன் என்று கூறுவதை BLACK MAIL செய்வது போலத்தான் பார்க்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது,

"கல்வி நிதி விடுவிப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்தபோது, "மும்மொழிக் கொள்கையை ஏற்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்? கல்வியில் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள். நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்" எனச் சொன்னார். இவ்வளவு உத்வேகமாக பேசிவிட்டு, "PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்.. 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார். இதனை 'BLACK MAIL' செய்வது போலத்தான் பார்க்கிறேன். " என்று தெரிவித்தார்.

Advertisement
Next Article