Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஹரியானா மாடல் 10 நாட்களுக்கு பின் கால்வாயில் சடலமாக மீட்பு!

02:54 PM Jan 13, 2024 IST | Web Editor
Advertisement

மாடல் பெண் திவ்யா பஹுஜாவின் உடலை உயிரிழந்த நிலையில், ஹரியானா தோஹ்னாவில் உள்ள கால்வாயில் போலீசார் மீட்டுள்ளனர்.

Advertisement

கடந்த ஜனவரி 2-ம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் மாடல் பெண் திவ்யா பஹுஜா, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அந்த ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங்கால் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஹரியானா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து,  விசாரணையை துவங்கிய குருகிராம் போலீசார் பல்வேறு வகையில் தங்கள் விசாரணையை துவங்கினர். 

அப்போது ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட பஹுஜாவின் உடலை அப்புறப்படுத்த உரிமையாளர் அபிஜீத் சிங் உள்ளிட்ட இருவர் சேர்ந்து உடலை காரில் இழுத்துச் சென்று பஞ்சாபின் மூனாக் பகுதியில் உள்ள கால்வாயில் சடலத்தை வீசியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து பஹுஜாவின் உடலை மீட்க குருகிராம் காவல்துறையின் 6 குழுக்கள் அமைக்கப்பட்டனர். பின்னர் பஞ்சாப் காவல்துறையின் பல குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 25 பேர் கொண்ட குழுவும் அவரது உடலை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து கடந்த 5-ம் தேதியன்று உடலை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் காரை  மீட்டதாக குருகிராம் போலீஸார் தெரிவித்தனர். கார் பாட்டியாலா பகுதிக்கு அருகே உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே நிறுத்தப்பட்டிருப்பது அங்குள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வாகனம் பாட்டியாலாவை நோக்கி ஓட்டிச் சென்றதை அறிந்து உடலை தேடியாதாக குறிப்பிட்டனர்.

அதன் பின்னர் இன்று (ஜன. 13) ஹரியானாவின் தோஹ்னாவில் உள்ள கால்வாயில் இருந்து திவ்யா பஹுஜா உடலை குருகிராம் போலீசார் மீட்டனர். பின்பு, பகுஜாவின் உடலின் புகைப்படம் மூலம் அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்டறியப்பட்டது திவ்யா பஹுஜா தான் என அடையாளத்தை உறுதிப்படுத்தினர். இந்த சம்பவத்திற்கு பிறகு, கொலை நடந்த தனியார் ஹோட்டலின் உரிமையாளரான அபிஜீத் சிங் உட்பட மூன்று பேரை குருகிராம் போலீஸார் கைது செய்தனர். பஹுஜா கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பால்ராஜ் கில் கொல்கத்தா விமான நிலையத்தில் கடந்த ஜனவரி 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

Tags :
Abhijeet SinghBhakraDivya PahujaGurugramharyanaNaina PahujaNews7Tamilnews7TamilUpdatesVijay Pratap Singh
Advertisement
Next Article