Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Haryana | ஜீப் கால்வாயில் கவிழ்ந்து விபத்து... 9 பேர் உயிரிழப்பு!

ஹரியானாவில் ஜீப் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
07:47 AM Feb 02, 2025 IST | Web Editor
Advertisement

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள மெஹ்மாரா கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். திருமண நிகழ்ச்சி நிறைவடைந்ததை அடுத்து அவர்கள் ஜீப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் ஜீப் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள சர்தரேவாலா கிராமம் அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் பக்ரா கால்வாயில் கவிழ்ந்தது.

Advertisement

இதையும் படியுங்கள் : கடைசி டி20 | தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா? இங்கிலாந்து அணியுடன் இன்று மோதல்!

அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் கால்வாயில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 9 பேரில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் 11 வயது சிறுமி, ஒரு குழந்தை, 5 பெண்கள் அடங்குவர். வாகனம் கால்வாயில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50-55 கிலோமீட்டர் தொலைவில் உடல்கள் மீட்கப்பட்டன.

மேலும், 3 பேர் மாயமானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடந்த பனிமூட்டம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்தில் சிக்கியது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. ஜீப் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
AccidentBhakra CanalCanalharyanahospitalnews7 tamilNews7 Tamil UpdatesPoliceRoad accident
Advertisement
Next Article