#T20WorldCup | 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
டி20 மகளிர் உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடருக்கு, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி நேற்று ( ஆகஸ்ட் -27ம் தேதி) வெளியிட்டுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி இந்திய அணியானது வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, துபை நகரங்களில் நடைபெற இருக்கின்றன.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் ஏ பிரிவிலும், பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.போட்டியில் ஒவ்வொரு அணியும் நான்கு குரூப் போட்டிகளில் விளையாடும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் அரையிறுதிக்கு முன்னேறும்.
அக்டோபர் 20 ஆம் தேதி துபையில் நடக்கும் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. அரையிறுதி, இறுதிப் போட்டிகள் இரண்டிற்கும் ரிசர்வ் நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னதாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை 10 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றது.
இதையும் படியுங்கள் : #EPS மீதான அவதூறு வழக்கு | செப்.19க்கு தள்ளிவைப்பு - அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறுவது என்ன?
இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளானர்.
இந்திய அணி விவரம் :
ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், எஸ் சஹாரே பாட்டீல், எஸ். சஜீவன்.