Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Srilanka-வின் இடைக்கால பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!

03:43 PM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.

Advertisement

இலங்கையில் கடந்த சனிக்கிழமையன்று 9-வது அதிபர் தேர்தல் நடைபெற்றது.  இத்தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஜே.வி.பி. என அழைக்கப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். இவர் அந்நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற உடனேயே அந்நாட்டின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரினி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக இவர் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் முதல் பெண் பிரதமரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, உலகின் முதல் பெண் பிரதமர் என்பதும் குறிப்பிடதக்கது. இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமர் சந்திரிகா குமாரதுங்க ஆவார்.

யார் இந்த ஹரினி அமரசூரிய?

54 வயதுடைய ஹரிணி அமரசூரிய ஸ்காட்லாந்துவில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கல்வியாளர், அரசியல் சமூக செயற்பாட்டாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர் ஆவார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு, அந் நாட்டின் கல்வி, நீதி மற்றும் தொழிற்துறை ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Harini Amarasuriyaprime ministerSrilanka
Advertisement
Next Article