Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன முனையக் கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி பதிவு!

09:42 PM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் அதிநவீன முனையக் கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக இருப்பது திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தான். பல்வேறு நாடுகளுக்குத் திருச்சியிலிருந்து இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மூலம் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக, 951 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணி 2019-ம் ஆண்டு தொடங்கியது. இப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் அதிநவீன முனையக் கட்டிடத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நவீன வசதி, தமிழ்நாட்டின் இணைப்பை மேம்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்குமான நமது அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Narendra modiNews7Tamilnews7TamilUpdatesPMO IndiaTrichyTrichy AirportTrichy New Airport Terminal
Advertisement
Next Article