For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் - நடிகர் ரஞ்சித் விமர்சனம்!

02:21 PM Nov 05, 2023 IST | Web Editor
ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும்   நடிகர் ரஞ்சித் விமர்சனம்
Advertisement

தமிழ்நாட்டில் ஹாப்பி சண்டே ஹாப்பி ஸ்ட்ரீட் என நிகழ்ச்சிகள் நடத்தி, கலாச்சார சீரழிவுக்கு வழி வகுப்பதாக பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சித் விமர்சித்துள்ளார்.

Advertisement

கொங்கு பண்பாட்டு அறக்கட்டளை மற்றும் சிங்கை வள்ளி கும்மி அமைப்பு ஆகியவற்றின் சார்பில் கோவை சவுரிபாளையம் பகுதியில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபல நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சமீப காலமாக நிறைய மனக்கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஹேப்பி சண்டே, ஹாப்பி ஸ்டிரீட் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

பொது இடங்களில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் சினிமா பாடல்களுக்கு நடனமாடி வருவதாகவும் மன உளைச்சலை போக்குவதற்கு தெருவில் இறங்கி தான் நடனமாட வேண்டுமா எனவும் கேள்வியெழுப்பியதுடன் அதற்கு பல பாராட்டுக்கள் வருவதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த கலாச்சாரம் தான் அடுத்து வரக்கூடிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

தொலைத்தொடர்புக்கு மட்டும்தான் என்று ஆரம்பத்தில் நினைத்து செல்போன் வாங்கி இன்று செல்போன் மூலம் குழந்தைகள் கெட்டுப் போகும் காலகட்டம் இருப்பது போல் தான் இந்த ஹேப்பி சண்டே, ஹாப்பி ஸ்டிரீட் என்பது அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்று தெரிவித்தார். மேலும் தாய்லாந்து சிங்கப்பூரை போன்று வரும் நிலைக்கு விடமாட்டோம் எனவும் தெரிவித்தார். ஹாப்பி ஸ்டிரீட், ஹாப்பி சண்டே போன்றவற்றை பிரபலமாக்குவதை விட கலாச்சாரத்தை பாதுகாக்கும் வள்ளி கும்மி போன்ற நிகழ்ச்சிகளையும் பத்திரிகைகள் ஊடகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags :
Advertisement