#Chennai | 3வது வாரமாக வேளச்சேரியில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் | நடனமாடி மகிழ்ந்த சென்னைவாசிகள்!
3வது வாரமாக வேளச்சேரியில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நடைபெற்றது.
எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சென்னைவாசிகளை COOL செய்வதற்காக ஹாப்பி
ஸ்ட்ரீட் மகிழ்ச்சி வீதி கொண்டாட்டம் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாகச் சென்னைவாசிகளிடையே காவல்துறையினர் ஒரு நட்பு பழக்கத்தைக் கொண்டு வர
வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர
காவல் துறை சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் கடந்த இரண்டு மாதங்களாக அண்ணாநகர் அண்ணா சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் ஹாப் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று, வேளச்சேரி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மூன்றாவது வாரமாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சென்னையில் பல்வேறு பகுதியில்
இருக்கக்கூடிய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு நபர்கள் சினிமா
பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். நடனம் மட்டுமில்லாமல், கைப்பந்து கால்பந்து,டென்னிஸ், போன்ற விளையாட்டுகளையும் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சி காலை 7.00 மணிக்கு தொடங்கி 9.00 மணி வரை இரண்டு மணி நேரம்
நடைபெறுகிறது, அதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலை,வேலை என ஒரே சக்கரத்தில் சுற்றி வரும் சென்னை வாசிகளை, சில மணி நேரங்கள்
மகிழ்விக்கும் தருணமாக இருக்க வேண்டும் என இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை ஒரு சில பகுதிகளில் மட்டுமல்லாமல்
சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த வேண்டும் என இளைஞர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஹாப்பி ஸ்ட்ரீட் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள் வட்டச் சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன் சைன் பள்ளி அருகில் வலது புறமாக திரும்பி எதிர்ப்புறம் உள்ள வட்டச் சாலை வழியாக சென்று கைவேலை சந்திப்பில் யு-டர்ன் எடுத்து ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
மேலும் விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்ட சாலையை
பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் படியாக கைவேலி சந்திப்பில் யூ,டர்ன் திருப்பம் செய்து வேளச்சேரி உள்வட்ட சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்".