For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Happy New Year - தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வாழ்த்து !

10:29 AM Jan 01, 2025 IST | Web Editor
happy new year   தூத்துக்குடி எம் பி  கனிமொழி வாழ்த்து
Advertisement

ஆங்கில புத்தாண்டையொட்டி கனிமொழி MP சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக ஆட்டம் பாட்டம், வாணவேடிக்கையுடன் வரவேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கனிமொழி MP வெளியிட்டுள்ள எக்ஸ் தல பதிவில் Happy New Year! ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்பம் பெருரும், துன்பம் ஒழியும், என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நன்நாளிலிருந்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் இந்திய நாட்டில் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திடவும் வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் உறுதியாக கிடைத்திட வேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு, கஞ்சா மற்றும் போதை இல்லாத தமிழகமாக 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்திட வேண்டுமென தேமுதிக சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement