"அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இன்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையின் தியாகத்தை போற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தையொட்டி பலரும் தங்கள் தாயிடம் ஆசிர்வாதம் பெறுவது வழக்கம்.
இந்த நாளில் தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக பரிசளிப்பது, அவர்களை பொழுதுபோக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் #MothersDay வாழ்த்துகள்! pic.twitter.com/6sCFPDcqTD
— M.K.Stalin (@mkstalin) May 11, 2025
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.