"அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்" - தவெக தலைவர் விஜய்!
மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
09:01 AM Aug 15, 2025 IST | Web Editor
Advertisement
இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம் அமைய வழிவகுக்கும்.
மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இத்திருநாளில் நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.